ஊரடங்கில் குழந்தைகளின் மனநிலை


கொரோனாவுக்கு முன் குழந்தைகளின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாம் ஒழுங்கமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர் மற்றும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தனர்.

ஆனால் கொரோனா வந்த பிறகு குழந்தைகளின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. நண்பர்களை பார்க்கவும் விளையாடவும் முடியாமல் அவர்களின் வாழ்க்கை தனிமைப்படுத்தப்பட்டது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வர முடியுமா அல்லது கொரோனா முடிவுக்கு வருமா போன்ற சந்தேகங்கள் நிறைந்த வாழ்க்கையாக இப்போது மாறியது. இதனாலே குழந்தைகள் மன
அழுத்தத்திற்கு ஆளாகினார்கள். அதனால் இப்போது குழந்தைகள் மனதளவிலும் உடலளவிலும் பலவீனமாக உள்ளனர்.

தொலைக்காட்சி, மடிக்கணினி அல்லது திறன்பேசி எல்லா நேரங்களிலும் வகுப்புகளுக்காகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ பார்ப்பது குழந்தைகளின் கண்களைக் கெடுத்து விட்டது. பல குழந்தைகள் தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவ்வாறு எல்லாம் ஊரடங்கு குழந்தைகளின் மனநிலையை பாதித்துள்ளது.