பாரதியார் என்றால் யார்? இந்த கேள்வி யார் மனதிலும் தோன்றத்தேவையில்லாத அளவில் அவர் கவிதைகளால் நம் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்துள்ளார்.பல மொழிகளைப் பயின்ற பாரதி, அரியாசனத்தில் வைத்த மொழி ஒரு மொழியைத்தான் அது ஒரு மிகப் பழமையான, பல பெருமைகளைக் கொண்ட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான மதிப்பிற்குரிய தமிழ்மொழியே ஆகும்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று கூறிய மஹாகவி பாரதியாரின் தமிழ் முழக்கத்தைப் பற்றி நான் இங்கு பேசப்போகிறேன்

“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” அது போல நான் கூறிய இவ்வரிகளே பாரதியாரின் மொழிப்பற்றைத் தெளிவாக விளக்குகிறது.

தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது, அது நுாறு சதவீதம் உண்மை என்று புரிந்து கொண்ட பாரதி கூறிய சில வரிகளை நான் இங்கு கூறப்போகிறேன்.

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! இவ்வரிகளை பாரதியார் தமிழ்த்தாயிக்கு சாகாவரம் தரவேண்டும் என்ற எண்ணத்தில் பாடினார் என்று தெளிவாக தெரிகிறது.

 

“வாழ்க நிரந்தரம்,வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே

வான மளந்த தனைத்து மளந்திடு

வண்மொழி வாழியவே

ஏழ்கடல் வைப்பினுந் தன்மனம் வீசி

யிசைகொண்டு வாழியவே

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி   

என்றென்றும் வாழியவே”

 

இவ்வரிகள் பாரதியாரின் தமிழ் முழக்கம் என்ன தமிழ் சூறாவளியையே விளக்குகிறது. இவ்வாரு, பாரதியாரின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு தமிழ் முழக்கம் உண்டு, அவரின் ஒரு பாடலில்கூட தமிழ்த்தாயின் தடம் இல்லாமல் இருந்ததே இல்லை. அவரின் மொழிப்பற்றுக்கு வானம்போல எல்லை இல்லை. நான் என் உரையை முடிக்கும் நேரம் வந்து விட்டது ஆனால் என் உரை முடிவது போலத் தமிழ்மொழி என்றும் முடிந்து விடக்கூடாது எப்பொழுதும் என் இனிய தமிழ் இன்பத் தமிழ் நீடூடி வாழவேண்டும்.

வாழ்க தமிழ், வெல்க தமிழகம் வாழ்க பாரதியாரின் புகழ்!